திரைவிமர்சனம்

 

பில்லா

ரஜினியின் பழைய பில்லா படம் அஜீத் நடிப்பில் பிரமாண்டமாய் வந்துள்ளது. போதை பொருள், ஆயுதங்கள் கடத்தும் சர்வதேச குற்றவாளி பில்லா மலேசியாவில் பதுங்குகிறான். அவனை பிடிக்க டி.எஸ்.பி. ஜெயப்பிரகாசுடன் இந்திய போலீஸ் முகாமிடுகிறது.போலீசிடம் இருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்கும் பில்லா போதை பொருள், ஆயுதங்கள் விற்று கோடிகளை குவிக்கிறான்.

ஒருகட்டத்தில் போலீசுக்கும் பில்லா கோஷ்டிக்கும் நடக்கும் சண்டையில் துப்பாக்கி குண்டு பில்லா மார்பில் பாய்ந்து சாகிறான். அவன் செத்தது டி.எஸ்.பி. ஜெயப்பிரகாசுக்கு மட்டும் தெரியும். பிணத்தை யாருக்கும் தெரியாமல் புதைக்கிறார்.

பில்லா கூட்டத்தை கூண்டோடு பிடிக்க அவனைப்போல் தோற்றம் கொண்ட பிக்பாக்கெட் திருடன் வேலுவை பில்லாவாக மாற்றி அனுப்புகிறார். பில்லாவோடு தொடர்பு வைத்துள்ள கடத்தல்காரர்கள் தகவல்களை பதிவு செய்துள்ள பென்டிரைவரை நைசாக எடுத்து ஜெயப்பிரகாசிடம் கொடுக்கிறான். பில்லா கூட்டத்தை கூண்டோடு பிடிக்க ஒரு பங்களாவை போலீஸ் சுற்றி வளைக்கிறது. அப்போது ஜெயப்பிரகாஷ் சாகடிக்கப்பட திருப்பம். வேலு கைதாகிறான். தான்பில்லா அல்ல என்கிறான்.


போலீஸ் நம்ப மறுக்கிறது. வேலு என்பதை எப்படி நிரூபித்து தப்புகிறான் என்பது கிளைமாக்ஸ்.

பில்லா, வேலு என இரு கேரக்டர்களில் அஜீத்.

இறுக்க முகம், மிடுக்கு நடை, நறுக் பேச்சு நெருப்பு பார்வையில் பில்லாவாக அதிரடி பண்ணியுள்ளார். விமான நிலையத்தில் கூல்டிரிங்ஸ் குடித்து டின்னை ஆகாயத்தில் விசிறி விட்டு எதிரிகளை இரு கைகளில் துப்பாக்கி பிடித்து சுட்டு வீழ்த்தி அறிமுகமாகும் ஆரம்பமே அப்ளாஸ்.

ஆயுதம் கடத்தி விற்கும்போது போலீஸ் சுற்றி வளைக்க கண்டெய்னருக்குள் இருந்தே காருடன் சீறிப்பாய்ந்து தப்புவது தீப்பொறி...

காதலியுடன் தப்பும் கூட்டாளியை காருக்குள் குண்டு வைத்து சமாதி ஆக்குவது... போலீசில் மாட்டிவிட திட்டமிடும் அவன் காதலியை கார் ஏற்றி கொல்வது பில்லா பாத்திரத்துக்கு உரமேற்றும் கொடூரம். பில்லாவை போலீஸ் துரத்தும் கார் சேசிங் பிரமாண்டத்தின் உச்சம்.

பிக்பாக்கெட் வேலு பாத்திரத்திலும் அஜீத் கலகலப்பூட்டுகிறார். ரத்த காயத்துடன் ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லும்போது பில்லா ஆட்கள் சரசரவென கார்களில் சுற்றி வளைத்து மீட்டு செல்வது பரபரப்பு திகில்...

போலீஸ் அதிகாரி செத்ததும் வேலு என்ன ஆவானோ என டென்ஷன்தொற்றி கொள்கிறது. உயர் போலீஸ் அதிகாரியே பில்லா கூட்டாளி என்பதும்... டி.எஸ்.பி. ஜெயப்பிரகாசை கொன்றவனும் அவன்தான் என்பதும்... எதிர்பாராத திருப்பம். அந்த அதிகாரியிடம் சிக்கி உயரமான பாலத்தில் இருந்து குதித்து அஜீத் தப்புவது ஆங்கில படவகை...அஜீத் நடிப்பில் இன்னொரு பரிணாமத்தை வெளிப்படுத்திய மைல்கல் படம்.

நயன்தாரா ஜேம்ஸ்பாண்ட் நாயகி சாயலில் பளிச்... உயரமான மாடியில் இருந்து கயிற்றில் தொங்கி தரையில் குதித்து அறிமுகமாகும் ஆரம்பத்திலேயே அதிர வைக்கிறார். போலீசார் வாகனங்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி அஜீத்தை கடத்தி போவது பரபரப்பு... நீச்சல் குளத்தில் தாராள கவர்ச்சி... தேகத்தை இத்தனை பச்சையாக இதுவரை காட்டவில்லை. சூடான இன்ப அதிர்ச்சி.

அண்ணனை கொன்ற பில்லாவை பழிவாங்க அவன் கூட்டத்தில் புகுந்து அழிக்க துடிக்கும் அவரது பாத்திர படைப்பு வலுவானது. பில்லா காதலியாக நமீதா கிளுகிளுப்பூட்டுகிறார். முடிவு பரிதாபம்...

போலீஸ் டி.எஸ்.பி. ஜெயப்பிரகாசாக வரும் பிரபு அலட்டிக்காமல் அழுத்தம் கொடுக்கிறார். வேலுவை பில்லாவாக்க பயிற்சி அளிப்பது கலகலப்பு...

சர்வதேச போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான் கேரக்டர் அதிர்ச்சி.

ஆங்கிலபடத்துக்கு நிகராக பிரமாண்டம், விறுவிறுப்பு, வேகத்துடன் திரைக்கதையை நகர்த்தியதில் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் ஜெயித்துள்ளார்.

பின்னணி இசையில் யுவன்சங்கர்ராஜா மிரட்டியுள்ளார்.

வெத்தலையை போட்டேன்டி `மை நேம் இஸ் பில்லா' ரீமிக்ஸ் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. நீரவ்ஷா ஒளிப்பதிவு இருட்டு வெளிச்சத்தில் விளையாடி இருக்கிறது.

தமிழில் ஒரு ஹாலிவுட் படம்.

பில்லா திரைப்படம் ஏராளமான இணையத்தளங்களில் வெளிவந்துள்ளது. அதில் ஒன்றான திரைவிருந்து இணையத்தளமும் இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பில்லா திரைப்படம்